ஜல்லிக்கட்டு - மாடு பிடி வீரர்கள், காளைகளுக்கான ஆன்- லைன் முன்பதிவு தொடங்கியது!
Sep 12, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல்லிக்கட்டு – மாடு பிடி வீரர்கள், காளைகளுக்கான ஆன்- லைன் முன்பதிவு தொடங்கியது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 7, 2026, 05:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி அவனியாபுரம், 16ஆம் தேதி பாலமேடு, 17ஆம் தேதி உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகிய 3போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் முன் பதிவு தொடங்கியது மாலை 5 மணிக்கு madurai.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

இதில் ஏராளமான இளைஞர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.

ஆன்லைன். மூலமாக பதிவு செய்யும் போது காளைகளுக்கான பதிவில் காளையின் இனம், பூர்வீகம், வயது, பல்வரிசைகள், நிறம், கொம்பின் நீளம், காளையின் உயரம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்ட வேண்டும.

இதேபோன்று மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவில் மாடுபிடி வீரரின் கைபேசி எண் , ஆதார் எண், பெயர், வயது, முகவரி, மின்னஞ்சல்,, எடை , இரத்த வகை , உயரம், காளையை அடக்குபவர் மருத்துவச் சான்றிதழ்,, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்த பின்னர் முன்பதிவு செய்யப்படுகிறது

நாளை மாலை 5மணி வரை  காளைகள், மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யலாம். பதிவின் போதே எந்த போட்டியில் கலந்துகொள்ளபோவது குறித்தும் தகவல் அளிக்க வேண்டும், ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரரோ, காளைகளோ மாற்று போட்டியில் கலந்துகொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்யப்பட்ட காளை மற்றும் மாடுபிடி வீரர்களின் ஆவணங்களை பொறுத்து அவர்களுக்கான அனுமதி சீட்டு ஆன்லைனிலயே டவுண்லோட் செய்துகொள்ளலாம்,

இதனையடுத்து போட்டிக்கு வரும் முன்பாக முன்பதிவு டோக்கனை எடுத்துவந்தால் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவர்.

ஆன்லைன் மூலமாக பதிவு தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்

முறைகேடுகளை தடுக்க QR code இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஆன்லைன் மூலமே டோக்கன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags: Online registration begunPongal festivalPalameduAlanganallurAvaniyapuram jallikattu
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த அதிமுக எம்பி இன்பதுரை!

Next Post

திருப்பூர் அருகே கோவில் இடிப்பு — நீதிமன்றம் மூலம் நியாயம் பெறுவோம் என இந்து முன்னணி உறுதி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies