சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்ற பக்தர்களுக்கு திடீர் தடை விதித்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அரசு மற்றும் அறநிலையத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் பக்தர்கள் நீங்காத வடுவை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் அதிர்வலைகள் இன்னும் ஓயாத நிலையில் சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆண்டாண்டு காலமாக 32 தெய்வங்களின் சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டு வந்த நிலையில், அவற்றுக்கு தடைவிதித்து ஒரே இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் உத்தரவிட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் ஒரு திருப்பரங்குன்றமா என பக்தர்கள் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளனர்.
















