மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை நகரில் கும்பகோணம் – சீர்காழி நெடுஞ்சாலையில் உள்ள சாரங்கபாணி மேம்பாலம் 6 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 5ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இந்நிலையில் மேம்பாலம் உறுதித் தன்மையின்றி காணப்படுவதாகவும், பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாஜகவினர் ஆன்லைன் வாயிலாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மனு அளித்துள்ளார்.
இதையடுத்து ஆண்டவனே இது அடுக்குமா என்ற சுவரொட்டி போஸ்டர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது.
















