இந்திய பொருட்களுக்கு 500 சதவீத இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நீண்ட ஆலோசனைக்கு பிறகு ரஷ்யா மீதான பொருளாதார தடை மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்கும் விதமாக மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ரஷ்யாவிடம் இருந்து சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவது, உக்ரைன் உடனான போரை தூண்டும் விதமாக அமைவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளை கச்சா எண்ணெய் வாங்க விடாமல் தடுப்பதே, மசோதாவின் நோக்கம் எனவும் பதிவிட்டுள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால்,
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 500 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
















