சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சபரிமலையில் ஜனவரி 14ம் தேதியன்று மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் பக்தர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
18-ம் படி ஏறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை, பம்பையிலேயே தடுத்து நிறுத்தி காவலர்கள் அனுப்பி வருகின்றனர்.
ஜனவரி 14-ம் தேதியன்று நேரடி மற்றும் ஆன்லைன் முன்பதிவு மூலமாக 35 ஆயிரம் பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் ஆறாவது பிரிவு காவலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சிறப்பு அதிகாரி சுஜித் தாஸ் தலைமையில், குழுவினர் தங்கள் பணிகளைத் தொடங்கினர்.
குழுவில் 11 டி.ஒய்.எஸ்.பி-க்கள், 34 சி.ஐ-க்கள் உள்ளிட்ட ஆயிரத்து 534 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மகரவிளக்கு திருவிழாவின்போது சபரிமலையில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக காவலர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
















