திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் நூற்றுக்கணக்கான மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் நல பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும் எனவும் 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்திருந்தது.
அதனை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் நல பணியாளர்கள் போராடி வருகின்றனர். திண்டுக்கல் கல்லறை முன்பு மக்கள் நல பணியாளர்கள் சங்க மாநில தலைவர் செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
















