மக்கள்தொகை கணக்கெடுப்பை திறம்பட மேற்கொள்ள ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் விரிவான, நம்பகமான தரவுகளைப் பெற்று, நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்திட இயலும் என்றும்,வழிமுறைகளை முடிவு செய்வதற்கு முன்பாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
















