கோவையில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார்.
2 நாட்கள் பயணமாக கோவை வந்துள்ள பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், வடவள்ளி பகுதியில் நடைபெற்ற ‘மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்ற நிலையில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதில் ஆர்வமுடன் கலந்துகொண்ட இருவரும், பெண்களுடன் இணைந்து கும்மி பாட்டுக்கு நடனமாடினர்.
விழாவுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை தந்திருந்த பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், அங்கிருந்த தாய்மார்களிடம் பொங்கல் வைப்பதன் முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து வீர விளையாட்டுகள் பற்றியும் அறிந்துகொண்ட அவர், உறியடித்து நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினர்.
மேலும், வள்ளி – கும்மி, தப்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளையும் ஆர்வமுடன் கண்டு ரசித்தார்.
















