இந்துக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்..
நம்முடைய பண்டிகைகள் பாரத நாட்டின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்று
சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடுகிறார்
சமத்துவ பொங்கல் என முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடுவது இந்துக்களை ஏமாற்றும் செயல்
இந்து பண்டிகைகளுக்கு மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதில்லை
பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும் என கூறினார்
















