மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவின் மிரட்டலுக்கு, தான் ஒருபோதும் பயப்படபோவதில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மும்பைக்கு வருகிறேன் முடிந்தால் ராஜ் தாக்கரே எனது காலை வெட்டட்டும் என தெரிவித்தார்.
ராஜ் தாக்கரேவின் மிரட்டல்களுக்கு ஒருபோது பயப்படபோவதில்லை என்றும், ராஜ் தாக்கரே மேடை அமைத்து திட்டும் அளவிற்கு நான் உயர்ந்துவிட்டேனா? என கேள்வி எழுப்பினார்.
மும்பை உலகத்தின் தலைநகரம் என கூறினால் மராட்டியர்களால் கட்டிய நகரம் என்று ஆகிவிடுமா? என்றும் அவர் வினவினார். தாக்ரேக்கள் என்னை அவமானப்படுத்துவது புதிதான ஒன்றல்ல என்றும் அவர் கூறினார்.
















