வங்கதேசத்திற்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் பாணியிலான நடவடிக்கையை இந்தியா எடுக்கக்கூடும் என பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் நஜாம் சேதி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தவிடு பொடியாக்கியது.
இந்நடவடிக்கையின் காரணமாக பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகள் பெரும் இழப்பை சந்தித்தன. போரில் வென்றதை போல காட்டிக் கொள்ள முயற்சிக்கும் பாகிஸ்தானிடம், முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு நெருக்கம் காட்டி வருகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் நெருங்கிய உதவியாளரான நஜாம் சேதி ஊடகமொன்றின் விவாதத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய நஜாம் சேதி, இந்தியா வங்கதேசத்தின் கருத்துக்களை புறக்கணிக்காது என கூறினார். தாங்கள் ஒரு பெரிய சக்தி என்பதை காட்ட வேண்டும் என்ற உணர்வு இந்தியாவில் உள்ளதாகவும், அதற்காக வங்கதேசத்திற்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் பாணியிலான நடவடிக்கையை இந்தியா எடுக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் நஜாம் சேதி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து அஞ்சி நடுங்கியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
















