வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தீவிரமாக இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பிரமாண்ட மாநாடு வரும் 23ம் தேதி மதுரையில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானதை அடுத்து சென்னையில் சென்னையில் இன்று காலை முதல் இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய பகுதிகளில் மாநாட்டை நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்
அதே போல காஞ்சிபுரம் அருகே சில இடங்களும் பார்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இன்று மாலை சென்னையில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது
















