தெளிவான வழிகாட்டுதலின் கீழ் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும், முப்படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த உதாரணம் எனவும் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து உறுதியான பதிலடி கொடுப்பது என்ற தெளிவான முடிவு உயர்மட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும், ஆப்ரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டு துல்லியமாகச் செயல்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், எதிர்காலத்தில் பாகிஸ்தான் செய்யும் எந்த தவறான முயற்சிகளுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மத்திய ஆயுதக் காவல் படைகள், உளவுத்துறை அமைப்புகள், மாநில நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புக்கும் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பாராட்டு தெரிவித்தார்.
















