சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பொங்கல் விழா கெண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தாம்பரம் அருகே உள்ள SIVET கல்லூரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய வேட்டி, சேலைகளை அணிந்து கொண்டு, முளைப்பாரியுடன் வந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் கபடி, ஸ்லோ சைக்கிள் ரேஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் பேராசிரியர்களும், கல்லூரி ஊழியர்களும் பங்கேற்றனர்.
















