செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டிற்காக பூமி பூஜை நடைபெற்றது.
மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநாடு நடைபெறும் இடத்தில் பணிகளை மேற்கொள்ள பூமி பூஜை செய்யப்பட்டது.
இதில் பாஜக, அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
















