பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள தொடர்பை பொங்கல் பண்டிகை நினைவூட்டுவதாக தெரிவித்துள்ளார்.
தலைமுறைகள் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை மேலோங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொங்கல் பண்டிகை, சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது, மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாகவும்,
வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
















