பொங்கல் பண்டிகை சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை தான் சம்பாதித்து இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, பொங்கல் பண்டிகை சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் தேசத்தை கட்டமைப்பதில் விவசாயிகளின் வலிமையான பங்களிப்பு இருப்பதாக கூறிய அவர், தற்சார்பு இந்தியா இயக்கம் விவசாயிகளின் முயற்சியால் வலிமை பெறுவதாக தெரிவித்தார்.
















