வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும்,
இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
ஈரானில் நடந்து வரும் போராட்டங்களை அமெரிக்கா தூண்டி விடுவதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், ஈரான் நிலைமையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறினார்.
மேலும், ஈரானில் கொலைகள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் கரோலினா லீவிட் எச்சரித்தார்.
















