மாட்டு பொங்கலையொட்டி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி தரும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மாட்டு பொங்கலையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, மாட்டு பொங்கல் தினத்தில் அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெற்றது.
நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் காட்சியளித்தனர்.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















