ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்தால்தான் ஜல்லிக்கட்டு போட்டி காலம் முழுவதும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் என்றாலே உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியைத்தான் எதிர்ப்பார்ப்பார்கள் என தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விரைந்து அனுமதி வழங்கிட வேண்டும் என்றும், ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் கட்சி சட்டத்தை நிறைவேற்றியதாக குறிப்பிட்டார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று உடனடியாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த பிரதமர் மோடி அனுமதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
















