தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரின் கேசரியா நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சுமார் 210 டன் எடை கொண்ட இந்த சிவலிங்கம், ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் இதனை செதுக்கி உள்ளனர்.
இந்த சிவலிங்கத்தில் ஆயிரத்து 8 சிறிய லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதால் சஹஸ்ரலிங்கம் என அழைக்கப்படுகிறது.
மாமல்லபுரத்தில் இருந்து இந்த லிங்கம் 96 சக்கரங்கள் கொண்ட லாரி மூலம் 2 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தூர கடந்து
சுமார் 47 நாட்கள் பயணத்துக்கு பிறகு கடந்த 5ம் தேதி பீகாரின் கேசரியாவை வந்தடைந்தது.
இந்நிலையில் கேசரியா நகரில் உள்ள விராட் ராமாயண கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















