தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி அளித்த தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கவை என தெரிவித்தார். நிறைவேற்றும் வாக்குறுதிகளை மட்டுமே என்டிஏ கூட்டணி அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் தமிழக பயணம் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், பிரதமரின் வருகை அன்று என்டிஏ கூட்டணியில் மேலும் பலர் இணையலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி, தமிழகத்திலும் எதிரொலிக்கும் என எல்.முருகன் கூறினார்.
















