ரிஷிகேஷில் இருக்கும்போது மட்டுமே நான் மிகுந்த அமைதியையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன் என வெளிநாட்டு பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டது வைரலாகி உள்ளது.
உத்தராகண்டின் ரிஷிகேஷ் அதன் யோகா மையங்கள், கங்கா ஆரத்தி மற்றும் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை அழகிற்காக உலகப் புகழ்பெற்றது.

பல வெளிநாட்டவர்கள் தங்களின் மன அழுத்தம் மற்றும் வாழ்க்கைச் சிக்கல்களிலிருந்து விடுபட இங்கு வந்து பல மாதங்கள் தங்குவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் லியோனி என்ற வெளிநாட்டு பெண் தனது இன்ஸ்டாகிராமில் ரிஷிகேஷில் தங்கி இருந்த நாட்கள் மிகுந்த அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த இடம் தனக்கு மீண்டும் சுதந்திரமாக சிரிக்கவும், எதையும் எளிதாகக் கடந்து செல்லவும், வாழ்க்கையை நேசிக்கவும் கற்றுக்கொடுத்தது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Watch the video here:
















