திருமாவளவனை தரக்குறைவாக பேசிய திமுக எம்பி ஆ.ராசாவைக் கண்டித்து குன்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் திருமாவளவனை சிறுமைப்படுத்தி தவறாக பேசிய திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், திருமாவளவனுக்கு எதிராக பேசிய கருத்தை ஆ.ராசா திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆ.ராசாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
















