இந்தியா – ஐக்கிய அரபு அமீகரம் இடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இரு நாடுகளின் வர்த்தகத்தை 2032ம் ஆண்டுக்குள் 200 மில்லியன் டாலராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து ஆண்டுதோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் எல்.என்.ஜி. கேஸ் கொள்முதல் செய்ய ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.
விண்வெளி சார்ந்த தொழில்களை மேம்படுத்துவது குறித்தும், வணிக ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
குஜராத்தில் அபுதாபி வங்கி மற்றும் DP வேர்ல்ட் நிறுவனத்தை தொடங்கவும், அபுதாபியில் இந்திய இல்லம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, பாதுகாப்புத்துறை, செயற்கை நுண்ணறிவு, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு வழங்கவும் இந்தியா – UAE இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
















