சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் RPF பெண் காவலரான ஜிஷா ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, இளம்பெண் ஒருவர் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருப்பதை கவனித்த அவர், பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.
சமீபத்தில் தனது சகோதரர் உயிரிழந்ததாக கூறிய அந்த பெண், விரக்தியில் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர் ஜிஷா, ரயில் நிலைய பணியாளர்கள் உதவியுடன் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. பெண் காவலர் மற்றும் ரயில்வே ஊழியர்களின் செயல் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
















