கேரளா வந்திருந்த ராகுல் காந்தியிடம் இந்தியில் கேள்வி எழுப்பிய சிறுவனை, காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி மைக்கை பறித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி விவகாரம் தொடர்பாக கேரளா சென்றிருந்த ராகுல்காந்தி, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று, தொண்டர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, ஒரு சிறுவன் ராகுல் காந்தியிடம், மேற்கு வங்கம் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது? என இந்தியில் கேள்வி கேட்டார்.
அதற்கு ராகுல் காந்தியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. மாறாக, அந்த சிறுவனை காங்கிரஸ் நிர்வாகிகள் மிரட்டியதுடன், அவனிடம் இருந்த மைக்கை பறித்தார்கள்.
இவை அனைத்தையும் ராகுல் காந்தி பார்த்துக்கொண்டு அமைதியாகவே நின்றிருந்தார். இது பொதுமக்களிடையே ராகுல் காந்தியின் அரசியல் ஆற்றல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
















