இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை பலமுறை எடுத்துக் கூறிவிட்டதாக தெரிவித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக, இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் செயல்படுவது நியாயமல்ல என குறிப்பிட்ட அவர், எங்களின் தேவைக்காக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு முழு உரிமை உள்ளது என கூறினார்.
















