ஆண்டின் தொடக்கத்தில் பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், நூற்றாண்டு கால மரபையும், பாரம்பரியத்தையும் கொண்ட மக்கள் சபையை ஆளுநர் அவமதிப்பதாக தெரிவித்தார்.
ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்,உரையை ஆளுநர் படித்ததாக பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறினார்.
ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
















