மறைந்த எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம் காலை கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் மற்றும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்ததும் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அத்துடன் இன்றைய சட்டப்பேரவையின் கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
















