அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை 2031-ம் ஆண்டு வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் சந்தாதாரரின் பங்களிப்பை பொறுத்து, 60 வயதிற்குப் பிறகு மாதம் ஆயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஜனவரி 19ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 8.66 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, திட்டத்தை 2031ஆம் நிதி ஆண்டு வரை தொடர ஒப்புதல் அளித்திருக்கிறது.
















