தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை, பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 17ம் தேதி 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டது. இந்தநிலையில் மேலும் மூன்று அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
அதன்படி நாகர்கோவில்-மங்களூரு, தாம்பரம்- திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகம் வழியாக தெலங்கானாவின் சர்வபள்ளிக்கு செல்லும் அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில்கள் எந்தெந்த நாட்களில் இயக்கப்படும் என்ற தகவல் ஐஆர்சிடி இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
















