தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சட்டவிதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு நேர கட்டுப்பாடு, பார கட்டுப்பாடு உள்ளிட்டவை உள்ளன. ஆனால், அந்த கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படுவதில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கனிம வள வாகனங்களுக்கு என நேர கட்டுப்பாடுகள் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் விதித்துள்ளது. இந்த நிலையில் கனிமவள கனரக வாகனங்கள் இந்த கட்டுப்பாட்டுகளை மீறி அதிக பாரங்களை ஏற்றி செல்வதும், அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் போது அனைத்து டயர்களையும் முழுமையாக இயக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சில டயர்களை சாலையில் படாமல் உயர்த்தி செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த டயர்களை உயர்த்தி செல்வதன் காரணமாக சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கனிம வள வாகனங்களை அதிகாரிகள் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த விதி மீறல்களை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















