திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் வழக்கில் 36 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைந்ததும் கையில் எடுத்தது. முப்பது பேர் கொண்ட சிபிஐ குழு, கடந்த 15 மாதங்களாக ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் விசாரணை நடத்தியது.
முதலில் தமிழகத்தில் உள்ள நிறுவனம்தான் இதற்கு காரணம் என்ற கோணத்தில் வழக்கு சென்ற நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த போலேபாபா நிறுவனம்தான் காரணம் என்பதும், பலர் இதற்கு உடந்தை என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ, அதில் 36 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இதில் ஒன்பது பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது,
அதில் ஆறு பேர் ஜாமின் பெற்ற நிலையில் மற்ற மூவரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
















