பிரதமர் மோடியின் தமிழக வருகை பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரம்மாண்ட NDA கூட்டணி மாநாட்டில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
அவரின் வருகை நம் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் காரியகர்த்தாக்களுக்கும், தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து தோழமைக் கட்சி தொண்டர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.
அதே உற்சாகத்தோடு சட்டமன்றத் தேர்தலை நமதாக்குவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
















