உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற இந்து கோயிலில், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பல ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள திரியுகிநாராயண் கோயிலில்தான், சிவபெருமானும் – பார்வதி தேவியும் திருமணம் செய்துகொண்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இந்தக் கோயில் திருமண பந்தத்தில் இணைவதற்கான பிரசித்திபெற்ற தலமாக கருதப்படுகிறது. இதற்கிடையே அப்பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்த நிலையில், சுபமுகூர்த்த தினமான கடந்த வசந்த பஞ்சமி நாளில், பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பல ஜோடிகள் திரியுகிநாராயண் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.
பனியால் சூழப்பட்ட அமைதியான சூழலில், கோயிலில் ஹோமகுண்டத்தை வலம் வந்து மணமக்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
சினிமா காட்சிகளை மெய்ப்பிக்கும் வகையில் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடந்த இந்த திருமணங்கள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின.
















