திமுக ஆட்சியில் 100 யூனிட்க்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நடிகர் கஞ்சா கருப்பு விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக தெரிவித்ததோடு, நடிகர் வடிவேலு புகுந்த கட்சியும், ஆமை புகுந்த கட்சியும் ஒன்று என விமர்சித்துள்ளார்.
















