மாநிலங்களின் நிதி நிலைமை சிக்கலில் இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது மாநிலங்களின் நிதிநிலைமை தற்போது சரிவடையும் நிலையில் உள்ளது எனவும்
இலவசங்கள் மற்றும் நிதி உதவி திட்டங்கள் மாநிலங்களுக்கான கடன்சுமையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களின் நிதி பற்றாக்குறை 2024-25ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது என தெரிவித்த ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்குழு
2025-26ல் முதல் அரையாண்டில் மாநில அரசுகள் வாங்கிய கடன் அளவு முந்தைய ஆண்டை காட்டிலும் 21 விழுக்காடு உயர்வு என தெரிவித்துள்ளது.
மேலும், மாநில அரசுகள் வழங்கும் இலவசங்கள், உதவித் தொகை போன்ற திட்டங்கள் நிதி நிலைமையை கடுமையாக பாதிக்கும் எனவும்
இதே நிலை நீடித்தால் நிதி நிலைமையின் பிரச்னை பெரிய அளவில் வெடிக்கும் அபாயம் உள்ளது எனவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
















