காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்,இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணியில் அவர் அளித்த பேட்டியில்
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்றும் மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன என கூறினார்
மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்களுக்கு திமுக அரசு உரிய சலுகைகளை வழங்கவில்லை எனவும் தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? கேள்வி எழுப்பினார்
காங்கிரஸ் ஆட்சியில் கொல்லப்பட்ட தியாகிகளை, அதே காங்கிரசுடன் சேர்ந்து திமுக கொண்டாடுவது முரணானது.. பாஜக ஆட்சிக்கு வந்தால் மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்களுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என தமிழிசை சௌந்தரராஜன் உறுதி அளித்தார்
















