ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை யொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் புதுச்சேரியில் சுவாமி விவேகனந்தர் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகளை முன்னிறுத்தி பதஞ்சலன் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அண்ணா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆர்எஸ்எஸ் வட தமிழக மாநில அமைப்பாளர் பிரஷோபகுமார், வலிமையான பாரதத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படையான பணி என தெரிவித்தார்.
















