அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என தெரிவித்தார்.
காளைகளை அடக்கும் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் அற்புதமான விளையாட்டு என்றும், கலாசாரத்தின் அடையாள விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதில் பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சி வந்தவுடன் ஜல்லிக்கட்டில் பலியானால் வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொடுப்படும் என்றும் தெரிவித்தார்.
















