அரசியலில் பல்முனை தாக்குதல் நடத்துவது மாபெரும் வெற்றிக்கான அறிகுறி என்றும், எதிர்க்கட்சிகள் புதிய இயக்கத்தை விமர்சிப்பது வரலாற்றில் இல்லாத ஒன்று எனவும் தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மீதான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்துவதற்கு பதிலாக புதிய கட்சியை அதிமுக விமர்சிக்கிறது என தெரிவித்தார்.
புதிய இயக்கத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது அரசியல் நடைமுறையில் இல்லாத ஒன்று என்றும், இது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்திலும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்ததாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
















