NDA-வின் அடுத்த கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை மீண்டும் சென்னை வருகிறார்.
நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அமைந்தக்கரை அய்யாவு மகாலில் நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்ப்பு பெட்டி தமிழ்நாடு சுற்றுப்பயணத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
அந்த குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க ஏதுவாக மக்களின் குறைகளை பெற உள்ளது. அதனை கொண்டு பாஜக 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கையை தயார் செய்ய உள்ளது.
மேலும் இந்த வருகையின்போது NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதற்கான சந்திப்புகளும் நிகழலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
















