சட்டமன்ற தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்குமான பொறுப்பாளர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார்
இதுதொடர்பான அறிவிப்பில், மத்திய அமைச்சர் எல்.முருகன், திருப்பரங்குன்றம், உதகை, திருப்பூர் வடக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மதுரை தெற்கு, சிங்காநல்லூர், காரைக்குடி, விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
















