மகாத்மா காந்தியின் சுதேசி கொள்கையே வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவின் அடிப்படைத் தூண் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு தனது வணக்கங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் சுதேசி கொள்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர் மகாத்மா காந்தி என்றும்,
இதுவே வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவின் அடிப்படை தூண் எனவும் கூறியுள்ளார்.
மேலும், காந்தியின் ஆளுமையும், செயல்களும் நாட்டு மக்களை தொடர்ந்து கடமையின் பாதையில் செல்வதற்கு ஊக்கமளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், அகிம்சை, வாய்மை, அறவழியை ஆயுதமாகக் கொண்டு சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற மகாத்மா காந்தியை நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.
அமைதி, சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு, கலாச்சாரப் பாதுகாப்பு முதலானவற்றைப் போதித்த காந்தியின் தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மகாத்மாவின் உயரிய போதனைகளைப் பின்பற்றி, அவருக்குப் புகழ் சேர்ப்போம் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
















