சபரிமலை கருவறைக்காக செய்யப்பட்ட புதிய தங்க தட்டுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்று உன்னிகிருஷ்ணன் போற்றி கூறியதாக நடிகர் ஜெயராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசியபோது 45 கிலோ தங்கத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கேரள கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையிவான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தங்க முலாம் பூசும் செலவை ஏற்ற கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போற்றியையும் கடந்தாண்டு புலனாய்வு குழு கைது செய்தது. இந்நிலையில், சபரிமலை தங்கத் திருட்டு விவகாரத்தில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
சென்னையில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருவதால் உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் பழக்கம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
சபரிமலை கருவறைக்காகச் செய்யப்பட்ட புதிய தங்கத் தட்டுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்று உன்னிகிருஷ்ணன் போற்றி கூறியதாகவும், அதனடிப்படையிலேயே தனது இல்லத்தில் பூஜைகள் நடத்தப்பட்டதாகவும் ஜெயராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
















