இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து ‘Mood of the Nation Survey’ என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தியது.
மக்களவைக்கு இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், 2026 ஜனவரி நிலவரப்படி என்டிஏ கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும்,
இண்டி கூட்டணிக்கு 182 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிஏ கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள், இண்டி கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகள், மற்ற கட்சிகளுக்கு 2 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
பாஜக மட்டும் 287 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடியின் தலைமைக்கு 57 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர், டிரம்ப் மிரட்டல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
















