ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக கூறி நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து 15க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இதில், மொத்தம் 33 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனே திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் லஞ்சத்தில் கொழிப்பதாகவும், வீடுகள் மற்றும் காலி இடங்களுக்கு வரி நிர்ணயம் செய்வதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்க நகராட்சி நிர்வாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும், நகராட்சி முழுவதும் உள்ள பாதாள சாக்கடைகள் உடைந்து கழிவுநீர் வீதிகளில் ஆறாக ஓடுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
















