மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 78ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைத் தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.
















