அதிமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது பழைய செய்தி என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
அதிமுகவில் இணைய தயார் என முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பதிலளித்த எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸை நீக்கியது பொதுக்குழு எடுத்த முடிவு எனவும், அவருக்கு அதிமுகவில் இடமில்லை என்றும் நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தேனியில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி கூறியது பழைய செய்தி என கூறினார்.
















